#nagapattinam | #crimenews Nagai குளத்தில் வீசிய போன்... மொத்த நீரையும் இறைத்து அலசிய டீம் - Ex தவெக நிர்வாகி வீட்டில் திக்திக் நாகையில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், தவெக முன்னாள் நிர்வாகி பூபாலன் வீட்டில் அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். சிந்தாமணியில் உள்ள பூபாலன் வீட்டின் பின்புறம், சதீஷ் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள குளத்து நீரை வெளியேற்றி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கடந்த மாதம் நடைபெற்ற சோதனையின்போது, பூபாலன் தனது செல்போனை குளத்தில் வீசியதாகக் கூறப்படும் நிலையில், அதனைத் தேடியும் அதிகாரிகள் சோதனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மெத்தபெட்டமைன் போதைப்பொருள் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் சோதனை நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் எந்த ஆவணங்களும் சிக்காத நிலையில், அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.