2-ம் கட்ட சுற்றுப்பயணத்தை அறிவித்த ஈபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை வரும் 24ஆம் தேதி புதுக்கோட்டையில் இருந்து தொடங்குகிறார். 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை மேட்டுப்பாளையத்தில் கடந்த 7-ம் தேதி ஈபிஎஸ் தொடங்கினார். இந்நிலையில், இரண்டாம் கட்டமாக வரும் 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8 வரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.