தமிழ்நாடு

கணிசமாக குறைந்த பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலை இன்றும் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் கடந்த அக்டோபர் மாதம் வரையில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வந்தது. 80 ரூபாயையும் தாண்டி விலை ஏறிக் கொண்டிருந்ததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக, பெட்ரோல் டீசல் விலை பத்து ரூபாய்க்கும் அதிகமாக குறைந்துள்ளது. சென்னையில், இன்று ஒரு லிட்டர் பெட்ரோல், 75 ரூபாய் 62 காசுகளுக்கு விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையை விட 39 காசுகள் குறைவு. இதேபோல, டீசலும், லிட்டருக்கு 43 காசுகள் குறைந்து 71 ரூபாய் 52 காசுகளுக்கு விற்பனையாகிறது. தொடர்ந்து விலை குறைந்து வருவதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்