தமிழ்நாடு

தொடர்ந்து 15 வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 15 நாட்களாக விலை உயர்ந்து வருவதால், அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

* கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் மார்ச் மாதத்தில் இருந்து மாற்றம் இல்லாமல் இருந்தது

* ஆனால் கடந்த இரண்டு வாரமாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதுடன், இன்றும் 15 வது நாட்களாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

* இன்று, பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து 82 ரூபாய் 58 காசுகளாகவும், டீசல் 51 காசுகள் உயர்ந்து 75 ரூபாய் 80 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

* கடந்த 15 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 4 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 58 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

* உலகம் முழுவதும் ஊரடங்கு காரணமாக பெட்ரோல், டீசல் தேவை குறைந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை கடும் சரிவைக் கண்டது.

* தற்போது, பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்து வருகிறது.

* இந்த நிலையில், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன.

* இந்திய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளதாக மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்