பெட்ரோலிய மண்டலம் பற்றிய தமிழக அரசின் குறிப்பு ஆணையை திரும்ப பெற, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு 2017ஆம் ஆண்டு, ஜூலை 19ஆம் தேதி வெளியிட்ட குறிப்பு ஆணையில், கடலூர், நாகையில் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் அமைக்க, 45 கிராமங்களில் 22 ஆயிரத்து 938 ஹெக்டேர் விளை நிலங்களை கையகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். காவிரி மாவட்டங்களை, வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பதில், தமிழக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், அந்த ஆணையை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.