தமிழ்நாடு

திரையரங்குகளில் 100 % இருக்கைக்கு எதிரான மனு தள்ளுபடி

தமிழகத்தில் திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கையை பயன்படுத்த அனுமதியளித்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம்

தந்தி டிவி

திரையரங்குகளில் 100 % இருக்கைக்கு எதிரான மனு தள்ளுபடி

தமிழகத்தில் திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கையை பயன்படுத்த அனுமதியளித்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.தமிழகத்தில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகளில் 100 % இருக்கையை பயன்படுத்த அனுமதியளித்து பிறக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.திரையரங்குகளில் 100 % இருக்கைக்கு அனுமதியளிப்பதால் கொரோனா பரவல் அபாயம் உள்ளதாக உடன்குடியை சேர்ந்த மனுதாரர் சிவமுருகன் ஆதித்தன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது நிபுணர்களின் ஆலோசனைபடி அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது எனக் கூறிய நீதிபதிகள், உத்தரவில் தலையிட முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.மீன் சந்தைகளில் இருப்பதை போன்று திரையரங்குகள் இருக்காது எனவும் அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நீதிபதிகள் கூறினர்.பண்டிகை காலங்களில் கொரோனா தாக்கம் அபாய அளவை தாண்டிவிடவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள்,இதுபோன்று ஆதாரம் இல்லாமல் வழக்குகளை தொடர்ந்து நீதிமன்றத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தக்கூடாது எனவும் கூறினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை