தமிழ்நாடு

பாலத்தில் காரை நிறுத்தி விட்டு திடீரென கீழே குதித்த நபர்

தந்தி டிவி

மும்பை அடல் சேது பாலத்தின் மீதிருந்து பொறியாளர் ஒருவர் கீழே குதித்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது... மகாராஷ்டிர மாநிலம் டோம்பிவலியில் உள்ள பலவா நகரில் வசித்து வரும் கருதூரி ஸ்ரீனிவாசுக்கு மனைவி மற்றும் 5 வயது மகள் உள்ள நிலையில், நேற்று பிற்பகல் தனது காரை பாலத்தில் பாதி வழியில் நிறுத்தி விட்டு பாலத்தில் இருந்து குதித்துள்ளார்... உடனடியாக போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மீட்புக் குழுவினர் அவரைத் தேடி வருகின்றனர்... நிதி நெருக்கடி காரணமாக அந்த நபர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என் சந்தேகிக்கப்படுகிறது... ஸ்ரீனிவாஸ் கடந்த ஆண்டு குவைத்தில் இருந்து திரும்பிய நிலையில் அங்கு இருந்த போதே தற்கொலைக்கு முயன்றதாக அவரது மனைவி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்