தமிழ்நாடு

சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து ரீல்ஸ் எடுத்து பதிவிட்ட நபர்

தந்தி டிவி

சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து ரீல்ஸ் எடுத்து பதிவிட்ட நபர்

இளஞ்சிறுமிகளான இருவர், விபரீதம் அறியாமல்... காண்போரை அச்சமூட்டும் வகையில் ஜீப் ஓட்டிய இந்த விவகாரம் ரீல்ஸ் வீடியோக்களாக வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....

திருப்பூர் மாவட்டம் பள்ளபாளையத்தை சேர்ந்த காளிமுத்து என்பவர்தான் சிறுமிகள் இருவரையும், ஜீப் ஓட்ட வைத்து ரீல்ஸ் எடுத்து பதிவிட்டிருக்கிறார்..

தனது இன்ஸ்டா பக்கத்தில் காளிமுத்து பதிவிட்டு ரீல்ஸ் வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், காளிமுத்து மீது கடும் நடவடிக்கை எடுக்ககோரி கண்டனங்கள் வலுத்தன...

விபரீதம் அறியாமல், அச்சமூட்டும் வகையில் ஜீப் ஓட்டிய சிறுமிகள்

இந்நிலையில்தான், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழலில் காவல்துறை இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது...

சாலையில் மக்களை அச்சுறுத்தும் படி இயக்கியிருந்தால் நடவடிக்கை"

சிறுமிகள் இருவரையும், தனது சொந்த விவசாய நிலத்தில் வைத்துதான் உரிமையாளர் ஜீப்பை இயக்க சொல்லியிருப்பதாகவும், சாலையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் இயக்கி இருந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது..

இருப்பினும், சம்பந்தப்பட்டவர்களுக்கு போலீசார் தரப்பில் உரிய முறையில் அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது...

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்