மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம மக்கள் மற்றும் அனைத்து சமூக பங்கெடுப்புடன் கூடிய விழாக் குழுவை அமைத்து ஜல்லிகட்டினை நடத்த உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி, 3 வழக்கறிஞர்கள் உள்பட 16 பேர் குழுவை அமைத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன்,ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும், நீதிபதியை உடன் அழைத்துச் சென்றுதான் விழா குழு நன்கொடை வாங்க வேண்டும் என்றும், வரும் 21 ஆம் தேதி அன்று வீடியோ ஆதாரம் உடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் இந்தாண்டு யாருக்கும் முதல் மரியாதை இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.