தமிழ்நாடு

காவிரி ஆணையத்துக்கு நிரந்தர தலைவர் தேவை - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்

காவிரி ஆணையத்திற்கு நிரந்த தலைவரை நியமிக்க உத்தரவிடக் கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தந்தி டிவி

மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன், காவிரி ஆணையத்தின் இடைக்கால தலைவராக செயல்பட்டு வருகிறார். நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி ஆணையத்துக்கு நிரந்தர தலைவர் நியமனம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மசூத் உசேன், மத்திய நீர் ஆணைய தலைவராக இருப்பதால், காவிரி ஆணையம் சுதந்திரமான அமைப்பாக செயல்படுவதில் இடையூறாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த மனு, அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மசூத் உசேன், இரு அமைப்பின் தலைவராக செயல்படுவதால் பல்வேறு குழப்பம் நிலவுவதாக தந்தி தொலைகாட்சி முன்கூட்டியே சொன்னது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்