ஓட்டு அரசியல் மக்களை பிரித்து வைத்துள்ளதாக, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் வேதனை தெரிவித்துள்ளார். சென்னையில், அமெரிக்க தூதரகம் மற்றும் Nalandaway அறக்கட்டளை சார்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமெரிக்க துணை தூதர் ராபர்ட் புர்கெஸ், திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரஞ்சித், அனைத்து ஜாதியிலும் தனிப்பிரிவுகளை உருவாக்கி விட்டதாக கூறினார்.