தமிழ்நாடு

பேரறிவாளன் புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றம் - வேலூர் சிறையில் இருந்த சொந்த ஊர் செல்லும் பேரறிவாளன்

பேரறிவாளன் புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

தந்தி டிவி
பேரறிவாளன் புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனை செல்ல ஏதுவாக வேலூர் மத்திய சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்ட பேரறிவாளன், சிறுநீரக சிகிச்சை பெற்றுவந்தார். இதனிடையே, பேரறிவாளனுக்கு பரோல் கேட்டு அவரது தாயார் அற்புதம் அம்மாள் மனு செய்தார். மனுவை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், 30 நாட்கள் பரோல் வழங்கிய நிலையில், தற்போது, புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வேலூர் சிறையில் இருந்து, அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படுவார் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்