தமிழ்நாடு

Perambalur | பெரம்பலூரில் கோரம் - விபத்தில் சிக்கிய 22 பிளஸ் 2 மாணவர்களுடன் சென்ற வேன்

பெரம்பலூரில் கோரம் - விபத்தில் சிக்கிய 22 பிளஸ் 2 மாணவர்களுடன் சென்ற வேன்

thanthitv

Perambalur | பெரம்பலூரில் கோரம் - விபத்தில் சிக்கிய 22 பிளஸ் 2 மாணவர்களுடன் சென்ற வேன்

பெரம்பலூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது பள்ளி மாணவர்கள் சென்ற சுற்றுலா சென்ற வேன் மோதிய விபத்தில் ஓட்டுநர் உட்பட 14 பள்ளி மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். திருத்தணியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 22 மாணவர்கள், கொடைக்கானல் சுற்றுலா செல்ல திட்டமிட்டு நேற்றிரவு திருத்தணியில் இருந்து வேனில் கொடைக்கானல் நோக்கி சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். பெரம்பலூர் சிறுவாச்சூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் வேன் வந்த போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் வெங்கட்(29) என்பவரின் இரு கால் எலும்புகள் முறிவு ஏற்பட்ட நிலையில் 13 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டு உயிர் தப்பினர்.சம்பவ இடத்திற்கு வந்த ரோந்து பணியில் இருந்த போலீசார் விபத்தில் காயமடைந்த மாணவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் தொடர்ந்து விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

India | PM Modi | Putin | பரபரப்புக்கு நடுவே இந்தியா வரும் புதின்.. திரும்பிய உலகின் பார்வை

🔴LIVE: AIADMK| EPS |பிரமாஸ்திரத்தை கையில் எடுத்த எஸ்.பி.வேலுமணி..அதிமுகவில் நொடிக்கு நொடி திக்..திக்

🔴LIVE : Petrol Diesel Price Hike | விடிந்ததும் பேரிடி.. மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை

🔴LIVE : CSK vs SRH | IPL 2026 | சிஎஸ்கேவை வீழ்த்தியது SRH | ரசிகர்கள் கருத்து

🔴LIVE : EPS Vs TVK Vijay | ADMK | ``முதுகில் குத்திய தவெக..'' | பரபரப்பை கிளப்பிய ஈபிஎஸ்