தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே, பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களைத் தட்டிக்கேட்ட பொதுமக்களிடம் அரிவாளைக் காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாயர்புரம் அருகே பெரும்படை சாஸ்தா கோவில் பகுதியில், தீபாவளியன்று இரவு 3 இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்கள் அதிவேகமாக பைக் ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தட்டிக்கேட்ட பொதுமக்களிடம், 5 இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டு அரிவாளைக் காட்டி மிரட்டியதுடன், வெட்டவும் முயன்றதாகப் புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பான புகாரின் பேரில், 5 இளைஞர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
#thuthukoodi #attack #thanthitv