தமிழ்நாடு

Chengalpattu New Busstand| புது பஸ்ஸ்டாண்டில் `திடுக்’ - போஸ்ட் கம்பத்தில் கட்டி வைத்த மக்கள்

புது பஸ்ஸ்டாண்டில் `திடுக்’ - போஸ்ட் கம்பத்தில் கட்டி வைத்த மக்கள்

thanthitv

செங்கல்பட்டு புது பஸ்ஸ்டாண்டில் `திடுக்’ - போஸ்ட் கம்பத்தில் கட்டி வைத்த மக்கள்

#theif #batterytheft #chengalpattunewbusstand

பேட்டரியை திருடியவரை மின்கம்பத்தில் கட்டிய பொதுமக்கள் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்த பேட்டரியை திருடிக்கொண்டு தப்ப முயன்ற இளைஞர் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கோகுலபுரத்தைச் சேர்ந்த சண்முகநாதன், தனது பானிபூரி கடையை மூடிவிட்டு, பேட்டரியை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்தபோது, அங்கு வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுஜித் என்பவர் பேட்டரியை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. சண்முகநாதன் கூச்சலிட்டதை தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவரை விரட்டிப் பிடித்தனர். அவரை அருகிலிருந்த மின் கம்பத்தில் கட்டி வைத்த நிலையில், ரோந்து பணியில் இருந்த போலீசார் மீட்டு செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tirupathi Temple ``எழுமலையானே.. கோவிந்தா’’ - திருப்பதி பிரம்மோற்சவத்தின் உச்ச நிகழ்வு

Delta | டபுளாக அதிகரித்து பொங்கிவரும் நீர்

Chennai | Airport | 36,000 அடி உயரத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு - சென்னையில் தரையிறக்கம்

Supremecourt தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட வழக்கு - முடிவெடுத்த உச்சநீதிமன்றம்

Dharman Movie | ``தர்மன் படத்தில் நடிக்க வைப்பதாக கூறி..’’ - அதிர்ச்சி புகார்