தமிழ்நாடு

நிரம்பி வழியும் கொடுமுடியாறு அணை : தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள கொடுமுடியாறு அணை முழுவதுமாக நிரம்பி வழிகிறது.

தந்தி டிவி
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள கொடுமுடியாறு அணை முழுவதுமாக நிரம்பி வழிகிறது. அணையின் முழு கொள்ளளவான 53 அடியை எட்டியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால், 5 ஆயிரத்து 780 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், ராதாபுரம்- வள்ளியூர் பகுதி மக்களும் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மாவட்ட நிர்வாகம் அணையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்