தமிழ்நாடு

கடலூர் : ஆட்சியருக்கு லஞ்சம் கொடுக்கும் விநோத போராட்டம்

கடலூர் அருகே கிராம நிர்வாக அதிகாரியை மாற்றக் கோரி, ஆட்சியருக்கு லஞ்சம் கொடுக்கும் விநோத போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நடுவீரப்பட்டு கிராம மக்கள், கோரிக்கை மனுவுடன், 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களையும் கொடுக்க உள்ளதாக தெரிவித்தனர். நடுவீரப்பட்டு கிராம நிர்வாக அலுவலர், சாதி, இருப்பிடம், வருமானம், பட்டா மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதாகவும், தர மறுத்தால் தகாத வார்த்தைகளால் திட்டுவதோடு, சான்றிதழ் வழங்க மறுப்பதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்