#chennai #thanthitv
சென்னை வியாசர்பாடியில், பெண்களை புகைப்படம் எடுத்ததாக தவறாக நினைத்து, டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பத்தூர் மதுபானக் கடை மேற்பார்வையாளராக வேலை பார்த்து வரும் செந்தில் என்பவர் தனது நண்பருக்கு இருப்பிடத்தை தெரிவிக்க செல்போனில் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் அங்கிருந்த பெண்களை புகைப்படம் எடுப்பதாக புரிந்துகொண்ட அப்பகுதியினர் அவரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.காயமடைந்த செந்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுத்தொடர்பாக கீதா, ரீமா, மோகனா, கலை, ஜெயராமன் ஆகியோரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.