Chennai Gas Cylinder | சென்னையில் சிலிண்டரோடு வந்து வரிசைகட்டி நின்று கேஸ் பிடித்த மக்கள் #chennai #lpgshortage #police எல்பிஜி மையத்தில் சிலிண்டர்களுக்கு கேஸ் நிரப்பிய பொதுமக்கள் சென்னை மாதவரம் அருகே உள்ள தனியார் ஆட்டோ எல்பிஜி கேஸ் மையத்தில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டிற்கு பயன்படும் எல்பிஜி சிலிண்டர்களை நூற்றுக்கும் மேற்பட்டோர் வரிசையாக வைத்து கேஸ் நிரப்பினர்.. அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக, ரூ.929.50 மதிப்புள்ள சிலிண்டரை ரூ.1100 முதல் ரூ.1150 வரை அதிக விலையில் விற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களை அப்புறப்படுத்தினர். சம்பவம் தெரிய வந்ததும் கேஸ் மைய உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.