"உன்னைய யாருமா 3 புள்ள பெத்துக்க சொன்னதுன்னு கேக்குறாங்க.." - முற்றுகையிட்ட மாற்றுத் திறனாளிகள்.. பரபரப்பு #Sivaganga #protest #thanthitv வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத் திறனாளிகள் சிவகங்கை மாவட்டம் திருபப்த்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்று மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளியின் மனைவியை, வட்ட வழங்கல் அலுவலர் தரக்குறைவாக பேசியதாக, வட்டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மணு அளிக்கச் சென்றபோது குழந்தைகள் பெற்றுக்கொண்டது குறித்து வட்ட வழங்கல் அலுவலர் கேள்வி எழுப்பியதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார்...