தமிழ்நாடு

உயிரோடு இருப்பதற்கான டிஜிட்டல் சான்றிதழ் : ஓய்வூதியதாரர்கள் நவம்பர், டிசம்பரில் சமர்ப்பிக்க வேண்டும்

ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிரோடு இருப்பதற்கான சான்றிதழை, டிஜிட்டல் முறையில் சமர்ப்பிப்பது கட்டாயம் என சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சலில்சங்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிரோடு இருப்பதற்கான சான்றிதழை, டிஜிட்டல் முறையில் சமர்ப்பிப்பது கட்டாயம் என சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சலில்சங்கர் தெரிவித்துள்ளார். தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் 1995 -இன் கீழ் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் முறையில் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது .

* ஓய்வூதியதாரர்கள், நவம்பர், டிசம்பரில் இந்த சான்றிதழை ஓய்வூதியம் பெறும் வங்கி கிளை, இ-சேவை மையம், வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ஆகியவற்றில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில், ஜனவரி மாதம் முதல் ஓய்வு ஊதியம் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்