தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை...

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தந்தி டிவி
அரியலூர் மாவட்டம் கல்லக்குடி அருகே உள்ள டால்மியாபுரத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருக்கு முதுகுவலி ஏற்பட்டதால், உறவினர்கள் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை அவருக்கு உணவு கொடுக்க வந்த உறவினர், வார்டில் அவர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மருத்துவமனையில் தேடிய போது கழிவறையில் கோவிந்தசாமி தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை சம்பவம் குறித்து பொள்ளாச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்