தமிழ்நாடு

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் தர்ணா...

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் நள்ளிரவில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து பயணிகள், நள்ளிரவில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் செங்கல்பட்டு, தின்டிவனம், விழுப்புரம் போன்ற ஊர்களில் நிற்காது என நடத்துநர்கள் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், நள்ளிரவில் அரசு பேருந்தை சிறைபிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்துக்கு பிறகு, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கூடுதல் பேருந்துகள் வரவழைத்து, பயணிகளை அனுப்பி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்