தமிழ்நாடு

மகனை கருணைக் கொலை செய்ய கோரி மனு - மருத்துவக்குழு பரிசோதனை

கருணைக் கொலைக்கு அனுமதி கோரியிருந்த சிறுவன் பாவேந்தனுக்கு, அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த திருமேணி - சசிகலா தம்பதி, தனது மகன் பாவேந்தனை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி, சிறுவனுக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்தது. இதனையடுத்து தற்போது எம்.ஆர்.ஐ. பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டான். இந்த பரிசோதனை முடிவுகள் வரும் 4ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி