தமிழ்நாடு

பெற்ற மகனை கருணை கொலை செய்ய கோரும் தாய் - கண்ணீர் பேட்டி

கடலூர் அருகே தாய், தந்தையைக் கூட அடையாளம் தெரியாத 10 வயது சிறுவனை கருணை கொலை செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் சோழதரம் கிராமத்தை சேர்ந்த திருமேணி-சசிகலா தம்பதி. இவர்களுக்கு கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த சிறுவனுக்கு10 வயதாகியும் எழுந்து நடக்க முடியவில்லை. தாய் தந்தையை கூட அடையாளம் தெரியவில்லை.

பிரசவத்தின் போது மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையே இதற்கு காரணம் என தம்பதி குற்றம்சாட்டுகின்றனர். எழுந்த நடக்க முடியாத தம்பியை பார்த்து இரு சகோதரிகள் மன உளைச்சலுக்கு ஆளாகுவதாக சசிகலா வேதனை தெரிவிக்கிறார்.

சொத்தை விற்று சிறுவனுக்கு சிகிச்சை அளித்தும் பலனில்லை எனவும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது தான் மிச்சம் என திருமேணி கண்கலங்குகிறார். எழுந்து கூட நடக்க முடியாத, தாய் தந்தையை அடையாளம் தெரியாத சிறுவனை கருணை கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி