சென்னையில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் கொலை வழக்கை போலீசார் மெத்தனமாக கையாள்வதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட கோரி அவர்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். குப்பை கிடங்கில் வீசப்பட்ட சந்தியாவின் உடல் பாகங்களை கண்டுபிடித்த போலீசார், கணவர் பாலகிருஷ்ணனை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.