தமிழ்நாடு

தேனியை உலுக்கிய சம்பவம்.. அம்மா,அப்பா எடுத்த விபரீத முடிவு -நிர்கதியாய் நின்ற விவரம் அறியா பிள்ளைகள்

தந்தி டிவி

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குடும்ப தகராறு காரணமாக கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். அப்பிப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பிரபாகரன்... இவரது மனைவி ஐஸ்வர்யா.. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பிரபாகரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படும் நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றும் தகராறு நடந்ததாக தெரிகிறது. இந்நிலையில், இன்று காலை கணவன்-மனைவி இருவரும் தூக்கில் தொங்கியபடி இறந்துள்ளனர். பெற்றோர் தற்கொலையால் 2 குழந்தைகளும் தவிப்பிற்குள்ளாகி இருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்