தமிழ்நாடு

நூதன போராட்டத்தில் இறங்கிய பரந்தூர் மக்கள்

தந்தி டிவி
• காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்று வட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், இந்த திட்டத்தால் தங்கள் குடியிருப்புகள், விளைநிலங்கள், நீர்நிலைகள் உள்ளிட்டவை அழிக்கப்படும் எனக் கூறி நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், ஏகனாபுரம், உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், அரசு நிலம் எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இதனைக் கண்டித்து, அனைத்து கிராம மக்களும் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். • அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாநிலத் தலைவர் சண்முகம் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விவசாயிகளின் அனுமதி இல்லாமல் நிலம் மற்றும் வீடுகள் கையகப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..