Paramakudi | Thasidar | TN Police | பரமக்குடியில் வட்டாட்சியர் மீது தாக்குதல் - 2 பேர் கைது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா அலுவலகத்தில், கண்மாயில் கருவேல மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பான புகார் குறித்து வட்டாட்சியர் ராமமூர்த்தியிடம் விளக்கம் கேட்கச் சென்ற கிராமத் தலைவர் தரப்பினருக்கும், வட்டாட்சியருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு நிலவியது. இதில் வட்டாட்சியர் ராமமூர்த்தி தாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, கார்த்திக் பாண்டியன் மற்றும் மலைராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.