பப்பாளி விலை 2 மடங்கு அதிகரித்துள்ளதால் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மகாராஜகடை, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதங்களில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ பப்பாளி, தற்போது 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள், மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.