தமிழ்நாடு

பானி பூரி வியாபாரி கொலை.. மனைவி கண்முன்னே அரங்கேறிய கொடூரம்.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்

தந்தி டிவி

சாத்தான்குளம் அருகே வீட்டின் முன்பு நின்றிருந்த பானி பூரி வியாபாரியை, சொகுசு காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவையை சேர்ந்தவர் மீரான். 47 வயதான இவர் இருசக்கர வாகனத்தில் பாணி பூரி வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு தனது வீட்டு முன்பு நின்ற மீரான் மீது, அதே பகுதியை சேர்ந்த இம்ரான் என்ற இளைஞர் சொகுசு காரில் மின்னல் வேகத்தில் வந்து பயங்கரமாக மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்த அவருடைய மனைவி, சம்பவம் குறித்து போலீசாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்து கதறி அழுதார். போலீசார் காலதாமதமாக வந்ததாக கூறி பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, காரில் தப்பி ஓடிய இம்ரானை தட்டார்மடம் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி