தமிழ்நாடு

Palladam | TN Police | 2 நாட்கள்.. ரியல் எஸ்டேட் நபருக்கு.. நடந்த ரூம் கொடூரம் - பல்லடத்தில் பகீர்

2 நாட்கள்.. ரியல் எஸ்டேட் நபருக்கு.. நடந்த ரூம் கொடூரம் - பல்லடத்தில் பகீர்

thanthitv

Palladam | TN Police | 2 நாட்கள்.. ரியல் எஸ்டேட் நபருக்கு.. நடந்த ரூம் கொடூரம் - பல்லடத்தில் பகீர் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கொடுத்த கடனுக்கு வட்டி கேட்டு, ரியல் எஸ்டேட் தொழில் செய்பவரை அறையில் அடைத்து வைத்து தாக்கிய சம்பவத்தில், 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கணபதிபாளையத்தை சேர்ந்த உதயகுமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நிலையில், பல்லடத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரிடம் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதில் ஒரு கோடி ரூபாயை திரும்ப கொடுத்த உதயகுமார், மீதமுள்ள 10 லட்சத்தையும், வட்டித் தொகையையும் பாக்கி வைத்துள்ளார். இந்நிலையில், ரியல் எஸ்டேட் இடம் பார்க்க செல்லலாம் என, உதயகுமாரையும் அவரது நண்பரையும் அழைத்து சென்ற சதீஷ்குமார், தொண்டாமுத்தூரில் அறையில் அடைத்து வைத்து 2 நாட்களாக தாக்கியதாக கூறப்படுகிறது. போலீஸ் உதவி எண்ணுக்கு அழைத்து, இதுகுறித்து உதயகுமார் தகவல் கூறியதை அடுத்து விரைந்து சென்ற போலீசார், உதயகுமாரையும் அவரது நண்பரையும் மீட்டனர். மேலும், சதீஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’