கிராமிய கலையை மீட்டெடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டம் இச்சிப்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட் ஓயிலாட்டக் கலைஞர்கள் பங்கேற்ற கிராமிய கலையை மீட்டெடுக்கும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வண்ணக் கோலங்களால் அலங்கரிக்கப்பட்ட மைதானத்தில் சிறுவர்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஒரே சீரூடை அணிந்து பம்பை இசைக்கு ஏற்ப சுமார் மூன்று மணிநேரம் ஓயிலாட்டம் ஆடி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க செய்தனர்.