தமிழ்நாடு

பாளையங்கோட்டை சிறைக்காவலர் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை

பாளையங்கோட்டை சிறைக்காவலர் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை

thanthitv

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் பணியாற்றி வந்த ஆயுதப்படை காவலர் முத்துக்குமார் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் மணிமுத்தாறு பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்தார். சுழற்சி முறையில் சிறையில் தங்கி பணியில் இருந்த நிலையில், அவர் திடீரென பூச்சி மருந்து அருந்தி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக மனஅழுத்தத்தில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்