தமிழ்நாடு

பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட புதிய ஆயராக சவரிமுத்து அந்தோணி சாமி பொறுப்பேற்பு

பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட புதிய ஆயர் பொறுப்பேற்றுள்ளார்.

தந்தி டிவி
பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட புதிய ஆயர் பொறுப்பேற்றுள்ளார். பாளை மறைமாவட்ட ஆயராக இருந்த ஜூடுபால்ராஜ் பதவிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, புதிய ஆயராக சவரிமுத்து அந்தோனிசாமியை போப் பிரான்சிஸ் நியமித்தார். இந்நிலையில் பாளை தூய சவேரியார் பேராலயத்தில் நேற்று நடந்த நிகழ்வில், மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி, சவரிமுத்து அந்தோணிசாமியை ஆயராக திருநிலைப்படுத்தினார். போப் பிரான்சிஸால் அனுப்பிவைக்கப்பட்ட பதவி அனுமதி பத்திரம் வாசிக்கப்பட்டு, கிருஷ்மா எண்ணை பூசி ஆயருக்கான மோதிரம் மற்றும் தலைப்பாகை அணிவிக்கப்பட்டு , செங்கோல் வழங்கப்பட்டு திருப்பீடத்தில் மதுரை உயர்மறை மாவட்ட பேராயரால் அழைத்து வரப்பட்டு ஆயருக்கான ஆசனத்தில் அமர வைக்கப்பட்டார்.

karur | Train Accident | College Bus | ரயில் மீது மோதிய கல்லூரி பேருந்து - கரூரில் பெரும் பரபரப்பு

CBI | TVK Vijay | Delhi | டெல்லியில் பரபரப்பாக நுழைந்த விஜய்

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்