=பழனி - கொடைக்கானல் சாலையில் புகுந்த ஒற்றை யானை, மளிகைக் கடையை சேதப்படுத்திய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது... அதிகாலை அண்ணா நகர் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை, சண்முகம் என்பவரது கடையின் கதவுகளைத் தும்பிக்கையால் தாக்கிச் சேதப்படுத்தியது. இதில் கடையிலிருந்த மளிகைப் பொருட்கள் சிதறி வீணாகின. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதையடுத்து, அந்த ஒற்றை யானை மெல்ல வனப்பகுதிக்குள் சென்றது. இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.