Palani | பழனி நில மோசடி - உயிரிழந்த கைதியின் உடல் ஒப்படைப்பு பழனி கோவில் நில முறைகேடு வழக்கில் கைதாகி, உயிரிழந்த வழக்கறிஞர் அன்வர்தீனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.... மதுரை மத்திய சிறையில் இருந்த அன்வர்தீனுக்கு, திடிரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலயே உயிரிழந்தார்.... அவரது இறப்பு தொடர்பாக மதுரை கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்... மேலும் விரைவு நீதிமன்ற நீதிபதி ராஜபிரபு, அன்வர்தீனின் உறவினர்களிடமும், சிறையிலும் விசாரணை நடத்தினார்... தொடர்ந்து அன்வர்தீனின் உடல் சிறப்பு மருத்துவ குழுவினர் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது