பழனி முருகன் கோவிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவை முழுக்க முழுக்க தமிழில் மட்டுமே நடத்தவேண்டும் என்று திரைப்பட இயக்குநர் கௌதமன் தெரிவித்துள்ளார். பழனி முருகன் கோவிலுக்கு, வருகை தந்த இயக்குநர் கௌதமன், சாமி தரிசனத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்திதார். அப்போது பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக முதலமைச்சரிடம் மனு கொடுக்க உள்ளதாகவும், தொடர்ந்து நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.