கந்த சஷ்டி விழாவையொட்டி, பழனி மலைக்கோவில் மற்றும் திருஆவினன்குடி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். கந்த சஷ்டி விரதத்தின் ஆறாவது நாளான இன்று பக்தர்கள் வாழைத்தண்டு விரதத்தை மேற்கொண்டு வருகின்றனர். இன்று மாலை பழனி வீதிகளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், அங்கு 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.