#lorry #Thoothukudi #thanthitv தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் பெயிண்ட் ஏற்றி சென்ற மினி லாரி சாலையோர தடுப்புக் கம்பியில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற மினி லாரியை மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் ஓட்டிச் சென்றார். விபத்தில் லாரியில் இருந்த ஏராளமான பிளாஸ்டிக் வாளிகளில் இருந்த பெயிண்ட் சாலையில் கொட்டி ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. ஓட்டுநர் சக்திவேல் படுகாயமடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் கொட்டிய பெயிண்டை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அகற்றிய நிலையில், அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.