மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் கடந்த 1981ஆம் ஆண்டு அமர் சேவா சங்கம தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். சுமார் 800 கிராமங்களில் சங்கத்தின் மூலம் சேவை செய்து வருவதாகவும், 25 ஆயிரம் மாற்று திறனாளிகள் பயன் அடைந்து உள்ளதாகவும் ராமகிருஷ்ணன் கூறினார். தங்கள் பணி விரிவடைய இந்த விருது உந்துதலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.