தமிழ்நாடு

ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் - அமலாக்கத் துறையினரும் வந்ததால் பரபரப்பு

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் அவரது வீட்டுக்கு வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து 305 கோடி ரூபாய் நிதியை பெற்றது தொடர்பான வழக்கை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் பிற்பகலில் தள்ளுபடி செய்த நிலையில், மாலையில் சிபிஐ அதிகாரிகள், அவரது வீட்டுக்கு வந்தனர். சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு அவர்கள் திரும்பிச் சென்றனர்.

சிறிது நேரத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகளும், ப.சிதம்பரம் வீட்டுக்கு வந்ததால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டில் ப.சிதம்பரம் இல்லை என்பதால் அவர்களும் திரும்பிச் சென்றனர். சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள், ப.சிதம்பரத்துக்கு சம்மன் அளித்துச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியானதால் ப.சிதம்பரத்தை கைது செய்யும் இடைக்கால தடை நீங்கி உள்ளது. எனவே, உச்ச நீதிமன்றத்தை ப.சிதம்பரம் அணுகி உள்ளார். இது தொடர்பாக, நாளை புதன்கிழமை, மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்