திண்டிவனத்தில் அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில், பேருந்தில் பயணித்த 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்
நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி அரசு சொகுசு பேருந்து ஆனது சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு திண்டிவனம் அடுத்த சலவதி அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது, திருவண்ணாமலை மார்க்கத்தில் புதுச்சேரி நோக்கி சென்ற லாரி, அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இதில் அரசு பேருந்து நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படு காயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் .
சென்னையில் இருந்து புதுவை நோக்கி சென்ற லாரி டிரைவர் சக்திவேல் விபத்தில் லாரி ஈடுபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தால் திண்டிவனம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் சுமார் ஐந்து கிலோ மீட்டருக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது போக்குவரத்தை திண்டிவனம் மற்றும் ரோசனை போலீசார் போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.