தமிழ்நாடு

ஒத்த செருப்பு திரைப்படத்தினை நிறுத்துவது கருணைக் கொலையைவிடவும் கொடூரமானது - நடிகர் பார்த்திபன்

புதிய படங்கள் வருகையால் ஒத்த செருப்பு திரைப்படத்தினை நிறுத்துவது கருணைக் கொலையைவிடவும் கொடூரமானது என்றும் நடிகர் பார்த்திபன் கூறினார்.

தந்தி டிவி

நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்த படம் மெல்ல மெல்ல ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஓடத் தொடங்கிய நிலையில் புதிய படங்களுக்காக அந்த படத்தை தங்களது திரையரங்குகளில் இருந்து உரிமையாளர்கள் எடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வேதனையடைந்த பார்த்திபன் திரையுலக நண்பர்களுடன் இணைந்து சென்னை திரைப்பட வர்த்தக சபையில் செய்தியாளர்களை சந்தித்தார். நடிகர் பார்த்திபன் நடித்து வெளிவந்துள்ள ஒத்த செருப்பு திரைப்படத்தினை தொடர்ந்து திரையிட வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு அப்போது நடிகர் ராதா ரவி வேண்டுகோள் விடுத்தார். தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.ஒத்த செருப்பு திரைப்படத்தினை தொடர்ந்து திரையிட்டு ஆதரவு அளிக்க வேண்டும் என நடிகர் பார்த்திபன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய படங்கள் வருகையால் திரையிடுவதை நிறுத்துவது கருணைக் கொலையைவிடவும் கொடூரமானது என்றும் கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் இருந்து பார்த்திபனுக்கு செய்தி ஒன்று வந்தது. தம்மை வீட்டில் வந்து சந்திக்குமாறு அவர் அதில் குறிப்பிட்டிருந்தார், அதனைதொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூவை அவரது இல்லத்தில் நடிகர் பார்த்திபன் சந்தித்து பேசினார். ஒத்த செருப்பு திரைப்படத்தினை தேசிய விருதுக்கு பரிந்துரைக்க உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ அப்போது கூறினார். ஒத்த செருப்பு ஆஸ்கர் விருதுக்கு தகுதியுள்ள படம் என்றும் அவர் பாராட்டினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்