தமிழ்நாடு

"தீவிரவாதிகள் ஊடுருவல் : அச்சம் தேவையில்லை" - ஓ.எஸ்.மணியன்

தமிழகத்தில், தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில், தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் புத்தூரில், 4 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார். வேளாங்கண்ணி திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இந்த ரயில்வே மேம்பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதில் தமிழக போலீசார் முழு கவனத்துடன் திறமையாக செயல்படுவார்கள் என்றும், தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தார். காஷ்மீர் விவகாரத்தில், பாதுகாப்பிற்காக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை, எதிர்கட்சிகள் ஏற்று நடக்க வேண்டும் என்றும் ஓ.எஸ்.மணியன் வேண்டுகோள் விடுத்தார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு