தமிழ்நாடு

தீக்குளித்து உயிரிழந்தவர் மரண வாக்குமூலத்தை தாக்கல் செய்ய உத்தரவு

தீக்குளித்து உயிரிழந்தவர் மரண வாக்குமூலத்தை தாக்கல் செய்ய உத்தரவு

thanthitv

தீக்குளித்து உயிரிழந்தவர் மரண வாக்குமூலத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

காவல்துறையினர் தொடர்ந்து தொந்தரவு செய்ததாகக் கூறி மன உளைச்சலில் தீக்குளித்து உயிரிழந்த நாராயணன் மரண வழக்கை, வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி அவரது மனைவி புவனேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். சொத்து தகராறு தொடர்பாக உறவினர் தரப்புக்கு ஆதரவாக போலீசார் தொந்தரவு செய்ததாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நீதிபதி புகழேந்தி விசாரித்த போது, நாராயணனின் மரணவாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், உடற்கூராய்வு முடிந்ததும் உடலை பெற்று இறுதி மரியாதை செய்யப்படும் என மனுதாரர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கவும் கூறி, வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்.

Women | Parliament | "ஏப்ரலுக்குள்... அனைத்து மகளிருக்கும்.." - வெளியான அதிமுக்கிய அப்டேட்

Breaking | Sathankulam Case | சாத்தான்குளம் வழக்கு | திடீரென மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட தண்டனை விவரம்

TVK Vijay | TVK Song | "நான் தன்னந்தனி ஆளு" - எதிர்பாரா நேரத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்

TVK Vijay | Trichy | ``கரூர் டூ ஜனநாயகன்.. நீதி வேண்டும்..'' | லிஸ்ட் போட்டு அட்டாக் செய்த விஜய்

TVK Vijay | Trichy | வேட்புமனு தாக்கல் செய்த உடனேயே MGR சிலை நோக்கி சென்ற `விஜய்’