சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று இளைஞர்கள் மதுபோதையில் கொலை மிரட்டல் விடுத்து மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் அரசு மருத்துவமனை அருகேயுள்ள சாலை வழியே திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள் நுழைந்த இளைஞர்கள், மதுபோதையில் தகராறு செய்து ஒருவரையொருவர் தாக்கி கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் சமாதனப்படுத்த முயன்ற போது, அவர்களின் கண்ணெதிரே இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர், அவரை அரிவாளால் வெட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள் துரத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.