தமிழ்நாடு

ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு முடித்து வைப்பு

துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்க கோரும் வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தந்தி டிவி

ஓ. பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அமர்வு முன் நடைபெற்ற விசாரணையின் முடிவில் இந்த விவகாரத்தில் சபாநாயகர் உரிய முடிவை எடுப்பார் என நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதே சமயம் நடவடிக்கை எடுக்க கால வரம்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும், உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்