Ooty | "திருட வந்த இடத்தில் பணம் இல்லை" வெறியில் திருடன் செய்த செயல் தான் ஹைலைட்டே உதகை சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள உணவகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடன், கல்லாவில் பணம் இல்லாததால் செல்போன் சார்ஜர் மற்றும் திணை உருண்டைகளைத் திருடிச் சென்ற விசித்திர சம்பவம் நடந்துள்ளது. பூமாலை வணிக வளாகத்தில் உள்ள சிற்றுண்டி உணவகத்தில் புகுந்த அந்த மர்ம நபர், டார்ச் லைட் உதவியுடன் தேடியும் 500 ரூபாய்க்கும் குறைவான பணமே கிடைத்துள்ளது. இதனால் விரக்தியடைந்த திருடன், அங்கிருந்த சார்ஜர் மற்றும் தின்பண்ட டப்பாவில் இருந்த திணை உருண்டைகளை எடுத்துக்கொண்டு தப்பியோடினான். இதே நபர் அருகிலுள்ள மற்ற கடைகளிலும் கைவரிசை காட்டியுள்ளது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ள நிலையில், போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.