ஊட்டியில் பூத்து குலுங்கும் புதிய ரக ரோஜாக்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகின்றன. அங்குள்ள அரசு ரோஜா பூங்காவில், நான்காயிரம் வகையான ரோஜா செடிகள் வைக்கப்பட்டுள்ளன. புதிதாக முந்நூறு வகையான ரோஜா செடிகள் அறிமுகமாகியுள்ள நிலையில், அவற்றை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த இரண்டு நாட்கள் மட்டும் சுமார் 60 ஆயிரம் சுற்றுலா பயணிகள், ரோஜா பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர்.